டிரம்ப்பை அடுத்து எலான் மஸ்க்கை அமெரிக்க அதிபராக்குகிறதா ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவின் ஆதரவினால் தான் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆனார் என்றும் அவர் அதிபர் ஆவதற்கு ரஷ்யா பல்வேறு வகைகளில் உதவி செய்தது என்றும் கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் விரைவில் அமெரிக்காவின் அதிபர் ஆவார் என ரஷ்யாவை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் டிமிட்ரி. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த ஆண்டு ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் என்றும் அப்போது அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெறும் என்றும் அந்த நேரத்தில் எலான் மஸ்க் அதிபராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஆவதற்கு ரஷ்யா ரகசியமாக ஆதரவு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப்புக்கு ரஷ்யா தான் உதவி செய்தது என்ற வதந்தி பரவி வரும் நிலையில் தற்போது அடுத்த எலான் மஸ்க்கை அதிபராக்க ரஷ்யா முயற்சித்து வருவதாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.