ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஒரே ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அலறி அடித்துக் கொண்டு மீண்டும் டுவிட்டரில் விளம்பரம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும், அதன் பிறகு அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை அவர் வேலையில் இருந்து நீக்கியது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக அதன் விளம்பரதாரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்திற்கு கொடுத்த விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டிவிட்டர் செயலியை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கினால் புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவேன் என எலான் மஸ்க் தனது டுவிட்டரில் டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஒரே ஒரு டுவிட்டை பார்த்து அலறி அடித்து தற்போது மீண்டும் விளம்பரம் கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.