மைக்ரோசாப்ட் நிறுவனம் ட்விட்டர் டேட்டாக்களை பயன்படுத்தி வருகிறது என்றும் இது தொடர்ந்தால் அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன் என்று ட்விட்டர் நிறுவனத்தின் எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அவரது கையில் ட்விட்டர் நிறுவனம் வந்த பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த சிஇஓ உட்பட பல பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும் ப்ளூடிக் பயனாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விளம்பரத்தை நிறுத்த போவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனால் கடுப்பான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தரவுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுத்தி வருவதாகவும் இது தொடர்ந்தால் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது அனுமதியின்றி ட்விட்டர் டேட்டாவை பயன்படுத்துவது குற்றம் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழக்கு தொடர போவதாகவும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரை அதன் கார்ப்பரேட் விளம்பர தளத்தில் இருந்து அகற்றும் பணியை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ததை அடுத்து தான் எலான் மஸ்க் இந்த மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 25 ஆம் தேதியிலிருந்து மைக்ரோசாப்ட் தனது விளம்பர தளத்தை ட்விட்டருக்கு தராது என்று கூறியது தான் இரு நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சனை என்று கூறப்பட்டு வருகிறது.