டிஎன்பிஎஸ்சி: தமிழில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி! குரூப் 4 புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் கட்டாயம்

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளில் காலியாக உள்ள இடத்தில் போட்டித் தேர்வு வைத்து அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பாடத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது.

இதில் தமிழ் மொழியில் தகுதி பெற்றால் மட்டுமே பணியில் கலந்து கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் சொல்லியபோது இணையதளத்தில் இடம் பெற்ற பாடத்திட்டங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது. அதற்கு மாறாக புதியதாக பொது தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் கூறினார்.

தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஓஎம்ஆர் வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும். 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதனால் புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment