கன்னியாகுமரி அடுத்த அழகியமண்டபம் பகுதியில் எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோது விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அடுத்துள்ள கருங்கல் பகுதியை சேர்ந்தவர் விஜு. நர்சிங் படித்துவரும் இவர் தன்னுடைய தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் காரை ஓட்டிக்கொண்டிருந்த போதே பெண் நண்பருடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஹோட்டல் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சோனு என்பரின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்துல் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கஅக்கம் பக்கத்தின் மீட்டு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.