Connect with us

விபத்துக்குள்ளான காரில் விபரீதம்! “யானை தந்தங்கள், மான்கொம்பு” பறிமுதல்!!

News

விபத்துக்குள்ளான காரில் விபரீதம்! “யானை தந்தங்கள், மான்கொம்பு” பறிமுதல்!!

881a220a7da69f1a4e62e33cbbea043e

தற்போது நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்  பலரும் சாலைகளில் வேகமாகச் செல்வது போன்றவைகள் விபத்துக்கு காரணமாக அமைகிறது. மேலும் பலரும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்தை  உருவாக்குகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் தற்போது வாகன விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மேலும் அந்த வாகன விபத்தில் உள்ள காரில் யானைத் தந்தங்கள் மற்றும் மான் கொம்பு போன்றவைகள் இருந்தது தெரியவந்தது.5401315e68fa060314cb0cd48f62bfa9-2

இதனால் அந்த காரில் உள்ள 6  யானை தந்தங்கள் மற்றும் மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விபத்தில் சிக்கிய எழும்பூர் எத்திராஜ் சாலை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வில்சனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள உறவினர் ஒருவர் தந்ததாக வில்சன் தெரிவித்ததாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

 இதனால் விபத்திற்குள்ளான வாகனத்தில் இத்தகைய விபரீதமான செயல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஆங்காங்கே இது போன்ற சம்பவங்கள் நம் தமிழகத்திலும் கூட நடைபெற்று வருவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக காணப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top