பானிபூரியை ருசித்து சாப்பிடும் யானை – வைரலாகும் மாஸ் வீடியோ!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில், கொட்டிக் கிடக்கும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இணையதளத்தில் வைரலாக வருவது உண்டு.

அந்த வகையில் யானை ஒன்று பானிபூரி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே அசாம் மாநிலம் கவுஹாத்தி மாவட்டத்தில் உள்ள தெஸ்பூரில் சாலையோரமாக பானிபூரியை ஒருவர் விற்பனை செய்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பாகனுடன் குட்டி யானை உடன் வந்து கடைக்காரரிடம் பானிபூரியை கேட்டு அங்கு நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மனிதர்களுக்கு தருவது போலவே பூரியுடன் மசாலாவை சேர்த்து கொடுத்துள்ளார்.

இதனை குட்டி யானையின் துதிக்கையால் வாங்கி வாய்க்குள் போட்டு ருசித்துள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பலரால் ஷேர் செய்து வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment