யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகள் அமைக்க அனுமதி; சுரங்கத்துறை ஆணையரை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்!

கோவை தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.
தெரிவித்துள்ளது. ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் துறை ஆணையர் தொடர்பாக வழக்கில் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த உயர் நீதிமன்றம், ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் செயல்படுகின்றனவா?? அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனப்பாதுகாப்பு, யானை வழித்தடம், யானைகள் வேட்டை தடுப்பு தொடர்பான வழக்குகளில் அபராத தொகையில் 2 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, செங்கல்களை எடுத்துக் கொள்ளவும், மற்ற அனுமதிகளை பெற்று செங்கற் சூளைகள் செயல்பட அனுமதித்து சுரங்கத் துறை ஆணையர் உத்தரவிட்டதாக மனுதாரர்கள் புகார் தெரிவித்தனர்.

யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு அமைக்கபட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கர்நாடகா கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரை உதவி செய்யும் அதிகாரியாக நியமனம் செய்ய உத்தரவிட்டதோடு,

மாநிலம் முழுவதும் பல இடங்களில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.