Connect with us

கன்னியாகுமரியில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட யானை சாவு!

Tamil Nadu

கன்னியாகுமரியில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட யானை சாவு!

defaea49d7c608646fad3a13fe6cfe95

கன்னியாகுமரியில் விளை நிலங்களை நாசம் செய்த யானை ஒன்றை வனத்துறையினரும் மயக்க ஊசி போட்டு பிடித்த நிலையில் அந்த யானை திடீரென இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் என்ற பகுதியில் சில நாட்களாக விளை நிலங்களில் புகுந்து யானை ஒன்று பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனை அடுத்து விவசாயிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதன்பின்னர் அந்த யானை உடலிலுள்ள புண்களுக்கு மருந்து போட்டு வனத்துறையை மருத்துவர்கள் சுத்தப்படுத்தினார் 

இந்த நிலையில் யானை பூரணமாக குணம் அடைந்தவுடன் வனப் பகுதிக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு செய்தபோது திடீரென நேற்று அந்த யானை இறந்தது. இதுகுறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த யானை பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை ஒன்று திடீரென இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top