யானைகளை தொந்தரவு செய்தால் இதுதான் கதி! சுற்றுலாப்பயணிகளை ஓட ஓட விரட்டிய யானைகள்!!

இந்த பூமி என்பது நமக்கானது மட்டும் அல்ல. பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம் தான். ஆனால் மனிதர்கள் என்னவோ தங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து வருகிறார்கள். உண்மையில் விலங்குகள் ஊருக்குள் நுழைவதில்லை. நாம் தான் அதன் இருப்பிடத்தில் வீடு கட்டியுள்ளோம்.

மனிதர்களால் விலங்குகளில் பெரிதும் பாதிக்கப்படுவது யானைகள் தான். ஏனெனில் யானைகள் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய விலங்குகள். ஆனால் அவற்றின் வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளனர். இதனால் தான் அடிக்கடி யானை மற்றும் மனிதன் இடையிலான தாக்குதல் நிகழ்கிறது.

விலங்குகள் ஊருக்குள் வந்து தொல்லை தருவதாக புகார் செய்யும் மக்கள் ஒன்றும் சும்மா இருப்பதில்லை. அவர்களும் அடிக்கடி காடுகளுக்குள் சென்று விலங்குகளிடம் வம்பிழுத்து விட்டு தான் வருகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அல்ல தென்னாப்பிரிக்காவில்.

தென்னாப்பிரிக்காவில் யானைகளின் இருப்பிடத்திற்கு சென்று அதன் வாழ்விடங்களை பார்ப்பது போன்ற சவாரிக்கள் மிகவும் சகஜமான ஒன்று. ஆனால் அப்படி செல்லும் போது ஜீப்பை விட்டு இறங்க கூடாது, விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது.

இதையெல்லாம் நாங்க ஃபாலோ பண்ண மாட்டோம் என்பது போல சுற்றுலா பயணிகள் சிலர் ஜீப்பில் இருந்து இறங்கி யானைகளுக்கு அருகில் சென்றுள்ளனர். இதில் கடுப்பான யானை ஜீப்பை கடுமையாக தாக்கியதோடு தொடர்ந்து அந்த பாதையில் செல்ல முடியாதபடி செய்து விட்டது. யானையின் இந்த செயலால் உயிர் பிழைத்தால் போதுமென சுற்றுலா பயணிகள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளனர்.

விமானம் மீது போர்தொடுத்த பறவை கூட்டம்! நடுவானில் நிகழ்ந்த சம்பவம்!!

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக விலங்குகள் அவைகளுக்கு ஆபத்து என்றால் மட்டுமே தாக்குமாம். இப்படி அவற்றின் இருப்பிடத்திற்கே சென்று தொந்தரவு செய்தால் அவை தாக்காமல் என்ன செய்யும் என விலங்கு நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வீடியோ காண: https://twitter.com/imAnant96/status/1465654454338736130

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment