Tamil Nadu
தந்தை-மகளை தாக்கிய யானை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தை மகள் ஆகிய இருவரை யானை ஒன்று தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் டீக்கடை ஒன்றை வைத்திருக்கிறார். தன்னுடைய டீக்கடையை திறப்பதற்காக இன்று காலை தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அப்பகுதியில் நின்றிருந்த யானை ஒன்று அவர்கள் முன்னால் வந்து தாக்கியது. இதில் மணிகண்டனுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருடைய மகளுக்கும் யானை தாக்கியதால் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் யானையை விரட்டி அடித்து காயமடைந்த தந்தை மகள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க உதவி செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கி வருகிறது என்பதால் வனத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
