ஆக்ரோஷமான காட்டு யானை; காரை தந்தத்தால் தள்ளிய அதிர வைக்கும் காட்சிகள்..!

கோத்தகிரி – மேட்டுபாளையம் நெடுசாலையில் நேற்று இரவு வாகனங்களை வழி மறித்த காட்டு யானை வேன் மற்றும் காரை தாக்கி சேதபடுத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அதில் சில ஒற்றை யானைகள் அடிக்கடி சாலை ஒரத்திற்கு நடமாடி வருகின்றன. கோத்தகிரி – மேட்டுப்பாளைம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டபள்ளம் பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யனை நேற்று இரவு சாலைக்கு வந்துள்ளது.

அதனை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி புகைபடம் எடுத்து கூச்சலிட்டு தொந்தரவு செய்ததாக கூறபடுகிறது. ஆத்திரமடைந்த ஒற்றை யானை காரை தந்தத்தால் தூக்கிய தள்ளியது.

பின்னர் அந்த வழியாக வந்த மினி வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த கோத்தகிரி வனத்துறையினர் யானையை வன பகுதிக்குள் விரட்டினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஒற்றை காட்டுயானை காரை தந்தத்தால் தூக்கி தள்ளும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பையும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment