துவக்க பள்ளிகளை திறக்கலாம்: ஐ.எம்.சி.ஆர் பரிந்துரை

74b5d96b5a4526a45b388a6f7a7ccefd

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கலாம் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து கூறிய போது பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை திறமையாக கையாள கூடிய திறமை உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதனால் முதல் கட்டமாக துவக்கப் பள்ளியை திறக்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர் 

ஆனால் அதற்கு முன்னர் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக துவக்கப்பள்ளிகளை திறக்க ஐ.எம்.சி.ஆர் பரிந்துரை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் இது குறித்து என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment