Connect with us

சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் ஏற்பாடுகள்; அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

தேர்தல்

தமிழகம்

சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் ஏற்பாடுகள்; அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் ஏற்பாடுகள்; அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க 13 பாதுகாப்பு உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக பழனிக்குமார் கூறினார். தமிழ்நாடு முழுவதும் 31029  வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவற்றில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 5794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் 15 158 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் பழனிக்குமார் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பழனிக்குமார் கூறினார். 1.33 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறினார்.

தலைநகர் சென்னையில் 3 IAS அதிகாரிகள் மேற்பார்வையாளராக செயல்படுவார் என்றும் பழனிக்குமார் கூறினார். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். முன் பார்வையாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு களுடன் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top