Connect with us

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மின்சார கட்டணம் உயரும்: டாடா பவர், அதானி குழுமம் அறிவிப்பு !!

electric post

News

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மின்சார கட்டணம் உயரும்: டாடா பவர், அதானி குழுமம் அறிவிப்பு !!

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மின்சார கட்டணம் உயரும்: டாடா பவர், அதானி குழுமம் அறிவிப்பு !!

நடப்பு ஆண்டில் இந்தியாவில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி வாகையை சூடியது. இதனிடையே தேர்தல் முடிந்த பிறகு ஒன்றிய அரசு கடந்த வாரத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் மும்பையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக டாடா பவர் போன்ற மின்சாரா தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2020- ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு டன் நிலக்கரி 5,500 க்கு விற்க்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யா- உக்ரைன் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு டன் நிலக்கரி விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

மும்பையில் தெற்கு பகுதி முழுவதும் மின் விநியோகம் செய்து வரும் டாடா நிறுவனம் பெரும்பாலும் நிலக்கரியை இறக்குமதி செய்தே மின் உற்பத்தி செய்துவருகிறது. மும்பையின் பிற நகர்களில் மின்வினியோகம் செய்துவரும் அதானி நிறுவனம் உள்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் போது மட்டும் நிலக்கரி இறக்குமதியை நம்பியுள்ளது.

எனவே டாடா நிறுவனம் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதன் படி ஒரு யூனிட்டுக்கு ரூ.1.10 காசுகள் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதே போல் அதானி நிறுவனமும் ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்த பரிந்துறை செய்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மின்வாரியம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மின்கட்டணத்தை அமல்படுத்த தீர்மானித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top