Connect with us

மின் கட்டண உயர்வு : நீதிமன்றம் புதிய உத்தரவு!!

ஐகோர்ட் மதுரை

தமிழகம்

மின் கட்டண உயர்வு : நீதிமன்றம் புதிய உத்தரவு!!

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நூற்பாலை சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாச்சலம் ஸ்டீல் நிறுவன வேளாண்மை இயக்குனர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரையில் ஆணையத்தில் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரையில் தமிழக மின்வாரிய உயர்வு குறித்த கோரிக்கையை மனு மீது, இறுதி உத்தரை பிறப்பிக்க தடை விதிக்குமாறு உத்தரவிட்டார்.

இத்தகைய உத்தரவானது சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரையில் அமலில் இருக்கும் என்றும் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top