Connect with us

மின்கட்டணம் உயர்வு: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ்!!

பழனிச்சாமி

தமிழகம்

மின்கட்டணம் உயர்வு: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ்!!

வீட்டு வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து வருகின்ற 25ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வீட்டு வரி மற்றும் மின்கட்டண உயர்வு வரையில் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்பு ரீதியாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக ஆட்சியில் மக்கள் நான்கு பக்கமும் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருவதாக தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே 2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வரியில்லா ஆட்சி நடத்துவோம் என திமுக அரசு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கழிவு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியை இதுவரையில் நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைப்பெறுவதாக கூறியுள்ளார்.

மேலும் இபிஎஸ் அவர்கள் இடைக்கால பொது செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தற்போது முதல் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top