மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு எதுவும் மின்வாரிய ஊழியர்களுக்கு அளிக்கப்படாத நிலையில்  மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டி  நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தொழிற்சங்கங்கள் பலமுறை  பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும்  இதுவரை ஏற்படவில்லை.

இதனால்  நாளை(பிப்-16-2018) முதல் வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையிலும் கூட இன்னமும் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்ததால் பாதிப்பு, அதைத்தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு என்று பாதிப்படைந்தது போல, இப்போது மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் என்னமாதிரியான பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர் மக்கள்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment