சென்னையில் அதிர்ச்சி!! ஏசியில் மின் கசிவு.. தீயில் கருகி ஒருவர் பலி..!!

சென்னையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் தமிழகத்தில் ஏசியினால் ஏற்படும் தீ விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). இவர் கட்டுமான தொழில் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக தெரிகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கு… இன்று மீண்டும் விசாரணை..!!!

நேற்றைய தினம் வேலையை முடிந்து விட்டு அறையில் ஏசி ஆன் செய்து உரங்கியுள்ளார். அப்போது காலை 6 மணியளவில் அவரது வீட்டில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு, கீழ்பாக்கம் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

போக்குவரத்து இடையூறு!! டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு..!!!!

பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது சுரேஷ்குமார் தீயின் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதே சமயம் அறையில் சிகரெட் இருந்துள்ளால் எதனால் தீ விபத்து ஏற்பட்டது போன்ற பல்வேறு காரணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.