பீரோவில் பாய்ந்த மின்சாரம்… 3 பேர் உயிரிழப்பு!!

தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில் பச்சையப்பன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இலியாஸ் என்பவர் பீரோ வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தரை தளத்தில் இருந்த இரும்பு பீரோ கயிறு கட்டி 2-வது மாடிக்கு கொண்டுசெல்ல முயன்றுள்ளனர். அப்போது பச்சையப்பா உள்ளிட்ட 4 பேர் கயிறு கட்டி  பீரோவை தூக்கிய போது மின்கம்பிகள்  மீது உரசியதால்  பீரோவில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது.

அப்போது நான்கு பேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன் மருத்துவமனைக்கு அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதே போல் மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீரோ தூக்கி சென்ற போது  மின்சாரம் பாய்ந்ததில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.