மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்!! வரும் 31-ம் தேதி வரை அவகாசம்..!!

கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் படி, தமிழகத்தில் மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் படி, வங்கி கணக்கு எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதில் நுகர்வோர் அச்சப்பட தேவையில்லை எனவும், வாடகைதாரகளிடம் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி 141 பேர் பலி!!

அதே போல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக சிறப்பு முகாம்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற 31-ம் தேதி வரையில் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் வழங்கப்படுவதாக கூறினார். இதுவரையில் 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறினார்.

சென்னையில் அதிர்ச்சி!! ஏசியில் மின் கசிவு.. தீயில் கருகி ஒருவர் பலி..!!

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைப்பெறுவதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.