Connect with us

காத்திருந்த இளைஞர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு?

tnpsc exams

தமிழகம்

காத்திருந்த இளைஞர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு?

மின்சார வாரியத்தில் கடந்த 2020- 2021ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட காலியாக இருக்க கூடிய 5,318 இடங்களை நிரப்ப  தமிழக அரசு அறிவிப்பு  ஒன்றை வெளியிடப்பட்டு இருருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அதே போல் இந்த இடங்களை நிரப்ப தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்  தற்போது  ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது.

இதனிடையே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்க பட்ட நிலையில் இதனை திருப்பி கொடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்பாக சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கொரோனா போன்ற காரணங்களினால் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறும் என நினைத்து இளைஞர்கள் தயாராகி வந்தன.

ஆனால் தற்போது இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் தேர்விற்காக காத்திருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top