பெங்களூர்-மைசூர் இடையே முதல் மின்சார பேருந்து சேவை!!

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் பைக்குகள் தற்போது தமிழகத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் காணப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் பயன்படுத்து வகையில் வண்ணமாக மின்சார பேருந்து சேவை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததுள்ளது.

அதன்படி கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து மைசூர் இடையே முதல் மின்சார பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு மைசூர் இடையே கே. எஸ்.ஆர்.டி.சி யின் முதல் மின்சார பேருந்து சேவை இன்று முதல் தொடங்குகிறது.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, டீசல், பெட்ரோல் பேருந்துக்கு பதில் மின்சார பேருந்தை இயக்க கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது. 43 பேர் அமர்ந்து பயணிக்கும் பேருந்தில் ஒவ்வொரு இருக்கைகளுக்கும் இடையே 12 மீட்டர் இடைவெளி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

பெங்களூர்-மைசூர் இடையே மின்சார பேருந்தில் பயணிக்க ரூபாய் 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்சார பேருந்து ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 320 கிலோமீட்டர் வரை இயக்கலாம் என்றும் தெரிகிறது.

முதல் கட்டமாக 20 பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படும் என்றும் மீதமுள்ள பேருந்துகள் அடுத்த மாதம் இயக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.