வேலூரில் இரவில் எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜரில் போட்டுவிட்டு தூங்கிய தந்தை, மகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன அல்லாபுரத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டாராக இருந்து வந்த துரைவர்மா நேற்றிரவு தனது எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜரில் போட்டுவிட்டு, வீட்டிற்குள் உறக்கச் சென்றுள்ளா.
எதிர்பாராதவிதமாக எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில், வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது.
அதிலிருந்து தப்பிக்க தந்தை, மகள் இருவரும் கழிவறைக்குள் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் புகைமூட்டம் அதிகமானதை அடுத்து தந்தை துரைவர்மா(49), மகள் மோகன பிரீத்தி(13) இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கழிவறையில் இருந்து தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.