Connect with us

முத்து நகரமான தூத்துக்குடியில் தேர்தல் நிலவரம்: எதிர்பார்ப்புகளோடு கோரிக்கைகளை அதிகம்!

Tuticorin Thermal Power Station at Night 1 crop

தமிழகம்

முத்து நகரமான தூத்துக்குடியில் தேர்தல் நிலவரம்: எதிர்பார்ப்புகளோடு கோரிக்கைகளை அதிகம்!

முத்து நகரமான தூத்துக்குடியில் தேர்தல் நிலவரம்: எதிர்பார்ப்புகளோடு கோரிக்கைகளை அதிகம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது. ஒருசில மீடியாக்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தி கொண்டு வருகின்றனர். அதே வேளையில் ஒவ்வொரு மாவட்டத்தை பொறுத்து தேர்தல் நிலவரத்தையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி பற்றி சில முக்கிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக நகராட்சியாக இருந்த தூத்துக்குடி 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாநகராட்சியாக உதயமானது.

தூத்துக்குடி மொத்தம் நான்கு மண்டலங்களை கொண்டுள்ளது. தூத்துக்குடியில் மொத்தம் கிழக்கு, மேற்கு, வடக்கு ,தெற்கு என 60 வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த 60 வார்டுகளில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 337 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியாக ஆன பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

மூன்றாவது முறையாக தேர்தலை சந்திக்கவுள்ள தூத்துக்குடி மாநகராட்சி எதிர்பார்ப்பு அதிகம் உள்ள அதே வேளையில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. தூத்துக்குடி-பாளையங்கோட்டை பிரதான மேம்பால சாலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதும் தூத்துக்குடி மக்களின் பிரதான கோரிக்கையாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top