
தமிழகம்
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை!!
இந்தியாவில் உள்ள அனைவரும் கட்டாயம் ஆதார் வைத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை மாறி உள்ளது. மேலும் பல இடங்களில் ஆதார் எண் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும் வேலை தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் ஓட்டர் ஐடியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வேலையும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன் மத்தியில் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் அதிகாரி கட்சிகளுடன் ஆலோசனை நகர்த்த உள்ளதாக தகவல் கிடைத்தது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார். ஆதார் எண் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
