Connect with us

மீதமுள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல்!!

News

மீதமுள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல்!!

a75b8e0b72232376e0c15832b6c5bc96

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தேர்தலானது ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. மேலும் இதன் முடிவு மே மாதம் வெளியானது இதில் பெரும்பான்மை பிடித்து திமுக ஆட்சியில் உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தற்போது உள்ளது அதிமுக. மேலும் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர் இருவரும் வெற்றி பெற்றனர். அதனால் அவர்கள் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர்கள் ராஜினாமா செய்த அந்த இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு வருகின்ற நாலாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.17bf4c5a4fa63007d49424f8440d0164

அதன்படி தமிழகத்தில் மீதமுள்ள இரண்டு மாநிலங்கள் அவை இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேபி முனுசாமி ,வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் அந்த இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது என்றும் கூறியுள்ளது.  பேரவை தேர்தலில் வென்ற கேபி முனுசாமி, வைத்திலிங்கம் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 22ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகிறது. புதுச்சேரியில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலும் இந்த அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top