தேர்தல் வெற்றி எனக்கு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு….! திமுகவின் தேவை முன்பைவிட அதிகம்;

பொதுவாக ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கு உள்ளது. சட்டப்பேரவைக்கு உள்ளும் சட்டப்பேரவை வெளியிலும் விமர்சித்து வரும். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கட்சியான அதிமுக தினந்தோறும் விமர்சித்து வரும்.

அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி முதல்வரை விமர்சிப்பார். அவர் விமர்சிக்கும் பெரும்பாலான ஒன்று தேர்தல் வாக்குறுதிகளை பற்றிதான். இந்த நிலையில் ஸ்டாலின் தான் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட உழைப்பேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட மேலும் உழைப்பேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது எனக்கு தமிழக மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

என்னுடைய பிறந்தநாளை ஒட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார் தற்போதைய சூழலில் திமுகவின் தேவை முன்பை விடவும் அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment