அதிமுக வேட்பாளர் தற்கொலை-காஞ்சிபுரம் 36 வது வார்டில் தேர்தல் நிறுத்தம்?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி விட்டால் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் அதிகமாக நிகழும். ஒரு சில இடங்களில் வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படும்.
ஆனால் இன்று எதிர்பாராத விதமாக ஒரு செயல் அதிமுகவில் நிகழ்ந்துள்ளது. அதன்படி இன்று காலை அதிமுக வேட்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் 36 வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜானகிராமன் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் நேற்று வரை அதிமுக தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 36-வது வார்டு தேர்தல் நிறுத்தம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக வேட்பாளர் தற்கொலையைத் தொடர்ந்து 36 வது வார்டில் தேர்தல் நிறுத்தம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் அளித்துள்ளார்.
