Connect with us

தலைநகர் சென்னையில் இப்படியா? தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரமடைந்துவிட்டது!

chennaii

தமிழகம்

தலைநகர் சென்னையில் இப்படியா? தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரமடைந்துவிட்டது!

தலைநகர் சென்னையில் இப்படியா? தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரமடைந்துவிட்டது!

நாளைய தினம் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு படை பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் வரிசையாக வந்து கொண்டுள்ளனர்.

இந்த தேர்தலில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

நகர உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தலைநகர் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 167 வார்டுகளில் மக்கள் அச்சமும் தயக்கமும் இன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

213 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களிலும் 54 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படை உள்ளிட்ட காவல்துறை அல்லாத 4000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 044-2345 2437 என்ற காவல்துறையின் தேர்தல் பிரிவு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் அரசியல் கட்சி சார்ந்த அலுவலகங்கள் இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் வரை எவ்வித வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top