Tamil Nadu
செப்டம்பர் 15ல் தேர்தல்: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத பகுதிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது
இந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ’உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டின் மீதம் உள்ள பகுதிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடித்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
