அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை செய்யும் சென்னை தேர்தல் அலுவலர்!

a1b96b266b507c0844b5718d37e7dc68

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னர் அறிவித்திருந்த தேதி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் தற்போது அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு மத்தியில் கவனமாக பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையானது மே  2ஆம் தேதி எண்ணப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது சூழ்நிலையை தலைகீழாக உள்ளது.

bcf6a61edcaf0933c43f1ad5618f1973

காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சில வாரங்களாக இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிக வீரியமாக காணப்படுகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சில தகவல்களை வெளியிட்டார்.அதன்படி தமிழகத்தில் மே இரண்டாம் தேதி வாக்கு என்ன படும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் கொரோனா விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

தற்போது சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சிகளுடன் கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தேர்தல் அலுவலர் பிரகாஷ் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது. இதில் திமுக சார்பில் கிரிராஜன் சேகர்பாபு கலந்து கொண்டுள்ளனர். மேலும் அதிமுக சார்பில் பாலகங்கா, அமமுக சார்பில் செந்தமிழ பங்கேற்றுள்ளனர். மேலும் பாஜக சார்பில் நாகராஜன் கராத்தே தியாகராஜன் மேலும் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையானது 14 சுற்றுகளாக உள்ள நிலையில் அதை குறைப்பது தொடர்பாக ஆலோசனை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment