Connect with us

Breaking: அக்.17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Congress

செய்திகள்

Breaking: அக்.17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இன்றைய தினத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணையை இறுதி செய்யும் வகையில் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைப்பெற்றது.

காணொலிக் காட்சி வாயிலாக நடைப்பெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சூழலில் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் உட்கட்சி குறித்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போது வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அக்.19ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top