5 மாநில சட்டப்பேரவை தேர்தல்-பேரணி நடத்த ஜனவரி 31-ம் தேதி வரை தடை!
பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது அடுத்த மாதம் நடக்க இருக்கின்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தான். அதிலும் குறிப்பாக பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மிகவும் மும்முரமாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக ,ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பேரணி நடத்த ஜனவரி 31ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஜனவரி 22ஆம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது 10 பேர் செல்ல அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இத்தகைய கட்டுப்பாட்டு விதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
