5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல்! ஒரு வாக்குச்சாவடிக்கு 1250 பேருக்கு மட்டுமே அனுமதி!

இன்று காலை திட்டமிடப்பட்டபடி 5 மாநில தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இன்று பிற்பகலுக்கு பின்னர் 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ஒரு வாக்குச்சாவடியில் 1250 பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா கூறினார்.  கொரோனா  காரணமாக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 24.9 லட்சம் பேர் முதல் முறையாக வாக்காளர்களாக உள்ளனர் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா கூறினார்.

11.4 லட்சம் முதல் முறை பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். தேர்தலுக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதை எந்தவிதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் போது அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கொரோனா, ஒமைக்ரான் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்றும் சுசில் சந்திரா கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment