News
பறந்து பறந்து பிடிக்கும் தேர்தல் பறக்கும் படை!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் என்ற பகுதியில் ஆவணங்கள் இன்றி செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக பண மோசடிகள், பணப்பட்டுவாடா பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தேர்தல்பறக்கும் படையினரின் சாமர்த்தியமான திறமையான முயற்சியால் அவ்வப்போது பல்வேறு இடங்களில் பண பரிவர்த்தனைகள் பண்ணுவது கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் என்ற பகுதியில் என்ன என்ற ஆவணங்கள் இல்லாத 4 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். இதுபோன்ற மேலும் பல்வேறு இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி செல்லும் பணங்களைப் பிடித்து வருகின்றனர்.
