Connect with us

4 நாட்கள் காவலர்களுக்கு விடுமுறை: மகிழ்ச்சியான அறிவிப்பு!

police case

தமிழகம்

4 நாட்கள் காவலர்களுக்கு விடுமுறை: மகிழ்ச்சியான அறிவிப்பு!

4 நாட்கள் காவலர்களுக்கு விடுமுறை: மகிழ்ச்சியான அறிவிப்பு!

நான்கு நாட்களுக்கு காவலர்களுக்கு விடுமுறை என காவல்துறை அறிவிப்பு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் 9-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் மாநிலங்களில் ஒன்று கடலூர் மாவட்டம் என்பதும் இந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக்காக சென்ற காவல்துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு நான்கு நாட்கள் விடுமுறை என கடலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாவட்ட காவல் துறையினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top