Tamil Nadu
தேர்தல் தேதி அறிவிப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் கேஎன் நேரு என்று பேட்டி அளித்துள்ளார்
தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15க்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் சென்னையில் பயிற்சி அளித்த அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்
எனவே மீண்டும் தமிழகத்தில் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது என்று தெரிவித்த கேஎன் நேரு இருப்பினும் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்தார்
ஏற்கனவே தேர்தல் நடத்துவதற்கு உண்டான ஆலோசனைகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது என்றும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் சூழல் ஏற்பட்டுள்ளதால் திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
