News
வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னர் அறிவித்திருந்த தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான சூழலில் கண்காணிப்பு மத்தியில் உள்ளது. சட்டமன்றத்தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மிகுந்த அதிகரித்துள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் நாளைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையம் ஆனது சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படிசட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலோசனை ஆனது காணொளி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நடைபெற்றதால் அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் எண்ணிக்கை குறித்தான தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
