Connect with us

அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்; அனைத்து அதிகாரமும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே!

Election Commission PTI 0

செய்திகள்

அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்; அனைத்து அதிகாரமும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே!

அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்; அனைத்து அதிகாரமும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே!

தமிழகத்தில் தற்போதைய பாஜக மாநில தலைவராக உள்ளார் அண்ணாமலை. இவர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளராக களம் இறங்கியபோது பலரை மிரட்டும் விதமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதோடு மட்டுமில்லாமல் அவர் நாள்தோறும் ஆளுங்கட்சியினர் செய்யும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டு வருவார். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் தனித்து களமிறங்கி இருந்தது.

பாஜகவின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். அப்போது தேர்தல் குறித்த கருத்துக்களையும், குறைகளையும் கூறிக் கொண்டு வந்தார்.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றிய புகாரை தேர்தல் ஆணையத்துடன் டேக் செய்திருந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அந்த பதிலில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அதிகாரம் முழுவதும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top