Connect with us

திங்கட்கிழமை தேர்தல் ஆணைய கூட்டம்: அதிமுகவில் யார் பங்கேற்பு?

ஓபிஎஸ்- ஈபிஎஸ்

தமிழகம்

திங்கட்கிழமை தேர்தல் ஆணைய கூட்டம்: அதிமுகவில் யார் பங்கேற்பு?

இந்தியாவில் உள்ள அனைத்து அடையாள அட்டைகளுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்திய பிரதா சாகு வருகின்ற ஒன்றாம் தேதி அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் விடுத்துள்ளது.

ஆனால் அதிமுக சார்பில் இருந்து யார் பங்கேற்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவுக்கு ஓபிஎஸ் கடிதத்தின் மூலமாக இவ்வாறு கூறியுள்ளார் .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top