Connect with us

உள்ளாட்சி தேர்தல், கூடுதல் அவகாசம்!

Tamil Nadu

உள்ளாட்சி தேர்தல், கூடுதல் அவகாசம்!

17bf4c5a4fa63007d49424f8440d0164

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் அந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் ஆறு மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

தனி அலுவலர் பதவியை டிசம்பர் 31 வரை நீடிக்கும் மசோதாவை மசோதா இன்று அமைச்சர்கள் கேஎன் நேரு மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனி அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை இருக்கும் என்பதால் அதற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top