News
மோடி போட்டோவை நீக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆனது மற்றுமொரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரதமர் என்று அழைக்கப்படுபவர் “நரேந்திர மோடி”.

நரேந்திர மோடியின் போட்டோவை ஆனது ஒரு சில பெட்ரோல் பங்குகளில் உள்ளது.இதனை நீக்க வேண்டுமென மனு போட்ட நிலையில் தேர்தல் ஆணையம் ஆனது அதற்கு ஒரு அறிக்கை கூறியுள்ளது.
அது என்னவெனில் நரேந்திர மோடியின் போட்டோவானது இன்னும் 72 மணி நேரத்திற்குள் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் நீக்க வேண்டும் என கூறியுள்ளது. தேர்தலில் அவரது போட்டோவானது தேர்தலுக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளது.
