தேர்தல் பிரச்சாரம்: கொடிகள், சுவரொட்டிகள், பதாகைகள் பயன்படுத்த தடை!

பிப்ரவரி 19ஆம் தேதி சனிக்கிழமை நம் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மேலும் தளர்வுகளை அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரத்திற்கான மேலும் தளர்வுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் 20 பேருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குபதிவு முடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட  48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரம் முடிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுவரொட்டிகள், கொடி, பதாகைகள், சிலைகளுக்கு அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ அல்லது சமூகம், ஜாதி அடிப்படையிலான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்கு சேகரிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment