News
சென்னையில் முதியவர்கள் அச்சம் தடுப்பூசி பயம்!55 சதவீதம் பேர் போட்டுக்கொள்ள வில்லை!
தமிழகத்தில் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். சென்னை மாநகரத்தில் சென்றால் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை தமிழகத்திலுள்ள மற்ற மாவட்ட கிராம மக்களிடமும் இளைஞர்கள் மத்தியில் இடமும் உள்ளது. மேலும் சிங்கார சென்னை வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் சென்னையில் சுற்றிப் பார்ப்பதற்கு மெரினா கடற்கரையில் உள்ளது. மேலும் சென்னை யானது நல்லதொரு சுற்றுலாத் தலமாகவும் நல்லதொரு மெட்ரோ சிட்டி ஆகவும் உள்ளது.

இந்நிலையில் இத்தனை சிறப்பைப் பெற்ற சென்னை மாநகரில் தினமும் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல செயின் பறிப்பு கொள்ளை போன்றவைகளும் நடைபெற்றுவருகின்றன. நமது தலைநகரமான சென்னையில் சில தினங்களாக கொரோனா தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொரோனா என்று கண்டறியப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறும் மத்திய அரசு என்று அறிவித்தது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசிகள் போடப்படுகிறது.மேலும் 45 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் சென்னையில் 45 மேற்பட்ட முதியவர்கள் பெரியவர்கள் அச்சத்துடன் போட மறுத்துள்ளனர். சென்னையில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55 சதவீதம் தடுப்பூசி போடவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் சுமார் 20 லட்சம் 45 வயதிற்கு மேற்பட்டோர் இருக்கின்றனர். இதுவரை 20 லட்சம் பேரில் தற்போது 9.51 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பூசி அச்சத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
