கீழடியில் எட்டாம் கட்ட ஆய்வு: காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!

தொன்றுதொட்ட மனிதனின் ஒவ்வொரு அடையாள குறிப்புகளும் மண்ணிற்குள் தோண்டி எடுக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக பழங்கால தமிழனின் வீரம், வாழ்க்கை முறை போன்ற குறிப்புகள் அனைத்தும் ஆங்காங்கே தொல்லியல் துறையினர் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கின்றனர்.

தொல்லியல் ஆராய்ச்சிகள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கீழடி,கொந்தகை உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் அதி தீவிரமாக நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் கீழடியில் எட்டாம் கட்ட ஆய்வு பணியை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் எட்டாம் கட்ட ஆய்வு பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment