சிறுவர் உட்பட பைக் ரேஸில் ஈடுபட்ட 8 பேர் கைது! வருகின்ற 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு;

நம் தலைநகர் சென்னையில் அதிக அளவு அட்டூழியங்கள் நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு விதமான சாகசங்களில் ஈடுபடுவது நாள்தோறும் நடைபெறுகிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை கொடுப்பதாக காணப்படுகிறது.

அதன்படி தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபடுவார்கள். இதனால் பொதுமக்கள் சாலைகளில் அச்சத்தோடு செல்லும் நிலை காணப்படுகிறது.

இந்த பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தடையை மீறி பைக் ரேஸில் ஈடுபட்ட 8 பேர் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி சென்னை காமராஜர் சாலையில் பைக் ரேஸ் ஈடுபட்டுள்ள 8 பேரை கைது செய்து அவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாதிக், ஆசிப், ரஹ்மத்துல்லா, முகேஷ், ஹரிஹரன், ரோமன், அல்கிரேப்ட் ஆகியோர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், சிறுவர்கள் 2 பேர் சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment