Connect with us

எட்டு மாத சாதனைகளே திமுகவுக்கு வெற்றியை தேடித் தரும்! அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத நிலை!!

அதிமுக-திமுக

தமிழகம்

எட்டு மாத சாதனைகளே திமுகவுக்கு வெற்றியை தேடித் தரும்! அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத நிலை!!

எட்டு மாத சாதனைகளே திமுகவுக்கு வெற்றியை தேடித் தரும்! அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத நிலை!!

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வர உள்ளது. இதனால் தமிழகமெங்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக சார்பில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக அரசின் சாதனைகளே தேர்தலில் வெற்றியை தரும் என்று திராவிட கழகத்தின் தலைவர் கூறியது திமுக கட்சி இடையே மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.

வீரமணி

திமுக அரசின் எட்டு மாத சாதனைகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடித்தரும் என்று வீரமணி கூறியுள்ளார். தஞ்சாவூரில் மண்டல திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இவ்வாறு பேட்டி அளித்தார்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவோம் என்று எஜமான விசுவாசத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்று வீரமணி கூறியுள்ளார். அரசை முடக்குவோம் என்று முடக்கு வாதத்தில் ஈடுபட்டால் திமுக இன்னும் கூடுதல் வெற்றியைப் பெறும் என்றும் வீரமணி கூறினார்.

அமாவாசை பெயரால் எடப்பாடி பழனிசாமி கற்பனையை வளர்த்தால் அதிமுக காணாமல் போகும் என்றும் வீரமணி கூறினார். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை இருந்தது என்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top