Connect with us

தினமும் எட்டு லட்சம் கோடி மதிப்புள்ள பால் உற்பத்தி!! விவசாயிகளுக்கு யூரியா 300 ரூபாய் மட்டுமே..!!

milk

செய்திகள்

தினமும் எட்டு லட்சம் கோடி மதிப்புள்ள பால் உற்பத்தி!! விவசாயிகளுக்கு யூரியா 300 ரூபாய் மட்டுமே..!!

நேற்றைய முந்தினம் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அவர் வருகையை ஒட்டி சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி யூரியா பற்றியும் பால்வளத்துறை பற்றியும் பல்வேறு விதமான தகவல்களை கூறியுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா முட்டையின் விலை 3,500 ஆக உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார். விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா முட்டை 300 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத்தின் காந்திநகர் உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசி விடுகிறார். ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவில் யூரியா கள்ள சந்தையில் விற்கப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர் என்றும் கூறினார்.

ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு போதிய யூரியா கிடைத்தது என்று கூறினார். மேலும் காந்திநகர் ஆலையில் ஒரு பை சிறுமணி யூரியாவிற்கு சமமாக 50 மில்லி லிட்டர் பாட்டிலில் நானோ யூரியா தயாரிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் தினமும் 8 லட்சம் கோடி மதிப்புள்ள பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் கூறினார். அரிசி, கோதுமை உற்பத்திகளை இணைத்தாலும் அதன் மதிப்பு பால் உற்பத்தி மதிப்பை விட குறைவாகவே இருக்கும் என்றும் கூறினார். குஜராத்தின் கிராமங்கள் அதிக வளமுடன் இருப்பதற்கு பால் கூட்டுறவு சங்கங்களே காரணம் என்று பிரதமர் மோடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top