
தமிழகம்
மழை நீர் வடிகால் பணியை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்.!!
எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. ஏனென்றால் தென்மேற்கு பருவமழை நம் தமிழகத்திற்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெய்து மழை பொழிவை அளித்துள்ளது.
அதிலும் தலைநகர் சென்னையில் 100 சதவீதத்திற்கு அதிகமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளதாக தெரிகிறது. இதனால் தினம்தோறும் மாலை நேரங்களில் சென்னையில் கன மழை பெய்து கொண்டு வருகிறது.
எனவே சென்னையில் உள்ள பல நகரங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகாலை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் ஒன்றனை விதித்துள்ளது.
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை முடிக்காமல் தாமதப்படுத்திய எட்டு ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காததால் எட்டு ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 2.25 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஆர்பிபி, பிஎன்சி நிறுவனங்கள், பாஸ்கர், ஜுனிதா, சண்முகவேல், அயன்டா நிறுவனங்களுக்கு அபராதத்தை விதித்துள்ளது. ஜி.கே.., போசன் நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்களுக்கு தலா ₹25,000 அபராதம் விதித்தது மாநகராட்சி.
மழை நீர் வடிகால் பணியில் பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்காத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
